என் மலர்

  ஆரோக்கியம்

  உடற்பயிற்சி
  X
  உடற்பயிற்சி

  ஜிம்முக்கு போறீங்களா? அப்ப இத படிங்க

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜிம்முக்கு வருவதன் நோக்கம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வாழத்தான். ஜிம்முக்கு செல்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  * ஜிம்முக்கு வருவதன் நோக்கம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் வாழத்தான். இந்த அடிப்படையை உணர்ந்து சரியான உடற்பயிற்சியாளரை/உடற்பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

  * பயிற்சியாளர்கள் இதற்கான பிரத்யேக படிப்பு படித்தவர்களாக இருப்பர். உடற்பயிற்சிகளுடன் முறையான உணவு உட்கொள்வது பற்றிய பயிற்சி கொடுப்பவராகவும் இருப்பார்கள்.  

  * ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக ஜிம்முக்கு வருவார்கள். முதலில் நீங்கள் எந்த நோக்கத்திற்காக செல்கிறீர்கள் என்பதில் தெளிவு வேண்டும். உடல் எடை குறைத்தல், உடல் எடை அதிகரித்தல், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் என பல காரணத்துக்காக ஒவ்வொருவரும் வருவார்கள். இந்த நோக்கத்தை பயிற்சியாளரிடம் தெளிவாகக் கூற வேண்டும்.

  * உங்கள் நோக்கத்துக்கு ஏற்றார்போல் பயிற்சியையும், டயட்டீஷியன் அறிவுறுத்தலின் பேரில் உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.

  * பொதுவாக உடல் எடை அதிகரிப்பைவிட எடையைக் குறைக்க வருபவர்கள்தான் அதிகம். இவர்கள் எண்ணெய் வகை  உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், புரதச்சத்துக்காக மாமிச வகைகளும் சேர்த்துக் கொள்ளலாம்.

  *17 வயது முதல் ஜிம்முக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். ஓடுவது, குதிப்பது(Cardio exercises), Cardio section EFX (cross trainer), சைக்ளிங், Spine bike இந்த பயிற்சியை எடுத்துக்கொள்வதால் உடல்  எடையை குறைப்பதுடன் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் முடியும்.

  * நீச்சல் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அல்லது விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த எடை கொண்ட பயிற்சியின் மூலம் உடலை வலிமையாக்குதல்(Light weight strength) பயிற்சி பெறலாம்.

  * இதயம் வலுப்பெறவும், எடை குறைதல், உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைக்கவும் உடல் அழுத்தம் குறைக்கவும் ட்ரெட் மில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  * பயிற்சியாளரின் அறிவுரை இல்லாமல் உடனடியாக தசைகள், எடை கூட வேண்டும் என்பதற்காக ஊக்க மருந்து(steroid) பயன்
  படுத்தும்போது பல மோசமான பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

  * சளி, இருமல், காய்ச்சல், புண், வெட்டுக்காயம் இருந்தால் ஜிம்முக்கு வருவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுத்தான் வர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, வீட்டிலோ அல்லது சாலையிலோ நடைப்பயிற்சி செய்யலாம்.

  * அதிக கட்டணம் வசூலிக்கும் குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி நிலையங்களில் கண்டிப்பு அதிகமாக இருக்கும். நோய் பரவாமல் இருக்கவும், பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கவும் சில வரையறைகள் பின்பற்றப்படுகிறது. எனவே, அவற்றை பின்பற்ற வேண்டும்.

  * யோகா மேட்(Yoga mat) பயன்படுத்தும்போதும், அடிவயிற்று உடற்
  பயிற்சி(Abdomen exercise) செய்யும்போதும் பெரிய துண்டு ஒன்றை விரித்தே பயிற்சி செய்ய வேண்டும்.

  * பயிற்சியின்போது கையுறைகள்(Cloves) பயன்படுத்துவது நல்லது. 3 நாளைக்கு ஒரு முறை அந்த கையுறைகளைத் துவைப்பதும் அவசியமாகும்.

  * ஜிம்முக்குச் சென்று வந்த பிறகு சோப்பு போட்டு கையை நன்கு கழுவ வேண்டும். அப்போதுதான் நோய் தொற்று அல்லது அலர்ஜி ஏற்படாமல் தடுக்கலாம். பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

  * காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உடல்நிலை சீரான பிறகுதான் ஜிம்முக்கு வர வேண்டும். இல்லையென்றால் மற்றவர்களுக்கும் பரவும் என்பதை பயிற்சி எடுத்துக்கொள்பவர்களும் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது நல்லதாகும்.

  * குளிரூட்டப்பட்ட ஜிம் மற்றும் குளிரூட்டப்படாத ஜிம் இரண்டிலும் சுகாதாரமாக இல்லை என்றால் சளி(Influenza),  ஈரத்தில் உருவாகும் பாக்டீரியா(Pseudomonas), பால் வகை நோய் ஏற்படுத்தும் கிருமி(Klebsiella), வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை பயிற்சி செய்கிறவர் மட்டுமின்றி, பயிற்சியாளர்களும் கவனிக்க வேண்டும்.
  Next Story
  ×