search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    ஸ்லிம்மான தொடை, கால்களுக்கு இந்த பயிற்சி செய்யுங்க

    இந்த பயிற்சி இடுப்பு, பின்தொடை, கெண்டைக்கால் தசைகளை வலுவாக்குகிறது. மேலும் இந்த பயிற்சியால் ஸ்லிம்மான தொடை, கால்களைப் பெற முடியும்.

    விரிப்பிப்ல முதலில் கால்களை சற்றே அகட்டியவாறு, நேராக நிமிர்ந்து நிற்கவும். படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு கையால் கெட்டில்பெல்லை தூக்கி, கையை மடக்கி வலது தோளுக்கு அருகில் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். அடுத்து ஒருகாலை முன்புறமாக மடக்கி உட்காரவும். மற்றொரு காலை பின்புறமாக  நீட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும். இப்போது கெட்டில்பெல்லை தலைக்குமேல் தூக்கியவாறு பிடிக்கவும். திரும்பவும் மெதுவாக எழுந்து நின்று கைகளை மடக்கி மார்புக்கு அருகில் வைத்துக் கொள்ளவும். இதேபோல் 10 முதல் 15 முறை செய்யலாம். கால்களைஇருபுறமும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

    பலன்கள்

    கெட்டில்பெல் லன்ஜ் உடற்பயிற்சிகள் முழு உடலுக்குமான வலிமை, நிலைத்தன்மை மற்றும் சமநிலைகளை மேன்படுத்த உதவுகிறது. முக்கியமாக கீழ் உடலுக்கான வலுவைத் தருகிறது. தொடை தசைநாண்களுக்கு மேம்பட்ட வலிமையைக் கொடுக்கிறது.

    தோள்களுக்கு மேல் எடையைத் தூக்கி செய்யும்போது தோள்பட்டை மற்றும் கைகளை இணைக்கும் இடங்களில் அசைவுத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் தோள்பட்டை வலி, கழுத்துவலி நீங்கும். இடுப்பு, பின்தொடை, கெண்டைக்கால் தசைகளை வலுவாக்குகிறது. ஸ்லிம்மான தொடை, கால்களைப் பெற முடியும்.
    Next Story
    ×