search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி

    உடற்பயிற்சி தினசரி தவறாமல் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் கிடைப்பது உறுதி.
    உடற்பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பு அதிகமாவதால் அதிக ரத்தம் உந்தப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் நன்றாக கலக்கப்பட்டு உடல் முழுவதும் சீராக பரவுகிறது. உடற்பயிற்சி செய்கிறபொழுது நம் மூளையிலிருந்து எண்டார்பின் என்கிற ரசாயனம் சுரக்கப்பட்டு நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கின்றது. மேலும் உடற்பயிற்சி தினசரி தவறாமல் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சாதாரண தொற்று நோயிலிருந்து, புற்றுநோய் அபாயம் வரை நோய்கள் தவிர்க்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சிக்கென நேரத்தை செலவிட்டு உணவு முறையை சீர்படுத்துவதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயற்ற வாழ்க்கையை நாம் பெறமுடியும்.

    உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் உடலினை தயார் படுத்த warmup செய்து தசைகளை சற்று தளர்த்திக்கொள்வது அவசியம்.

    உடற்பயிற்சி முடிக்கும் முன் மெள்ளமெள்ளக் குறைத்து warmup செய்து முடிக்க வேண்டும்.

    உடல் சிரமத்திற்கு உள்ளாகும் கடுமையான பயிற்சியை செய்தல் கூடாது. உடல் ஒத்துழைக்கும் அளவிற்கான பயிற்சியை மட்டுமே செய்தல் நல்லது.

    சரியான உடற்பயிற்சி அணிகலன்களை அணிந்து செய்வது பாதுகாப்பானது.

    உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக தண்ணீர், முளைகட்டிய தானிய வகைகள், பழங்கள் மற்றும் பழச்சாறு உட்கொள்ள வேண்டும்.

    புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்களுக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உடல் மற்றும் தசை வலி இருக்கும். அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் கிடைப்பது உறுதி.
    Next Story
    ×