search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பலூன் ஊதும் பயிற்சி
    X
    பலூன் ஊதும் பயிற்சி

    நுரையீரல் நலனுக்கு உதவும் பலூன் ஊதும் பயிற்சி

    மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல, நுரையீரல் நலனுக்கும் பலூன் ஊதுவது மிகச்சிறந்த பயிற்சி என்கின்றனர், நுரையீரல் மருத்துவர்கள். பலூன் பயிற்சி மூச்சிரைக்கும் பிரச்சினையைச் சரியாக்கும்.
    கொண்டாட்டங்கள், விழாக்களில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருள் பலூன். மன அழுத்தம் தரும் விஷயங்களை பலூனில் எழுதி, அதை பறக்கவிடுவதன் மூலம் அந்த அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்பது மனநல மருத்துவர்களின் கூற்று. மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல, நுரையீரல் நலனுக்கும் பலூன் ஊதுவது மிகச்சிறந்த பயிற்சி என்கின்றனர், நுரையீரல் மருத்துவர்கள். பலூன் ஊதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    வயறு மற்றும் மார்பகத்தைப் பிரிக்கும் குறுக்குத் தசையான உதரவிதானம், வயிற்றின் உட்பகுதி தசை ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் நுரையீரலின் செயல்பாடு அமையும். பலூன் ஊதும்போது இரு தசைகளும் வலிமை பெற்று, நுரையீரலின் செயல்பாடுகள் சீராகி, சுவாச பிரச்சினைகள் தடுக்கப்படும்.

    பலூன் ஊதுவது தசைகளை வலுப்படுத்தும் என்பதால் தசைப் பிடிப்புகள், மூட்டுவலி உள்ளிட்டவை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமீபத்திய ஓர் ஆய்வில் முதுகுவலிக்கான காரணிகளாக சுவாச பிரச்சினைகளும், உடல் தோற்றமும் சொல்லப்பட்டு இருந்தன. பலூன் ஊதுவதன் மூலம் இந்த இரண்டு பிரச்சினைகளும் சரியாகும் என்பதால், முதுகுவலிக்குத் தீர்வு கிடைக்கும்.

    பலூன் ஊதும்போது அடிவயிற்றுப் பகுதி தசைகள் அழுத்தத்துக்கு உள்ளாகும். தொடர்ந்து இந்தப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படும் போது அவை வலுப்பெற்று உடலின் தோற்றம் சீராகும். ஒருவர் சுவாசிக்கும் போது நுரையீரலின் அடிப்பகுதியில் இருக்கும் உதரவிதானம்தான் காற்றை உள்ளிழுப்பதற்கு பெரும்பங்காற்றும். உதரவிதானத்தின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் அதிக அளவு காற்று உள்இழுக்கப்படும். இது, நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கும். புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு உதரவிதானம் தசை பாதிக்கப்பட்டு இருக்கும். பலூன் ஊதுவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு அவர்கள் எளிமையாகத் தீர்வு காணலாம்.

    மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலூன் ஊதுவது ஆறுதல் தருவதாக அமையும். வாழ்க்கையின் தரத்தை அதிகரிப்பதில் நுரையீரலின் செயல்பாடு, சீரான சுவாசம் ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இவை இரண்டையும் சீராக்க, பலூன் ஊதும் பயிற்சி உதவும். உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு மூச்சிரைக்கும் பிரச்சினை ஏற்படலாம். பலூன் பயிற்சி மூச்சிரைக்கும் பிரச்சினையைச் சரியாக்கும்.

    ஒருவரால் எவ்வளவு நேரம் இயல்பாக பலூனை ஊத முடிகிறதோ, அதுவரை ஊதலாம். மூச்சிரைப்பதுபோல உணர்ந்தால் பலூன் ஊதும் பயிற்சியை நிறுத்திவிடலாம். ஒருவர் ஒரே முறையில் எவ்வளவு வேகமாக பலூன் ஊதுகிறார், பலூன் ஊதும் போது எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து விடுகிறார், பலூன் ஊதும் போது நுரையீரல் எத்தனை முறை சுருங்கி விரிகிறது என்பது போன்ற விவரங்களைவைத்து ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியம் கணக்கிடப்பட்டது. எனவே இந்த பயிற்சியை தினமும் செய்யலாம்.
    Next Story
    ×