என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலை வலுவாக்கி அழகாக்கும் எளிய உடற்பயிற்சி ஸ்கிப்பிங்
Byமாலை மலர்12 Sep 2019 2:35 AM GMT (Updated: 12 Sep 2019 2:35 AM GMT)
உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் "ஸ்கிப்பிங்' முதன்மையானது. "ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். அதிகப்படியாக இருப்பின், குறையும். உடல் பருமன் பிரச்சனை தீரும்.
உடல் உழைப்பு குறைந்து கணினிமயமான இன்றைய உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. விளைவு, உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, நோய்களால் அவதிப்படுவதும், சிறு வயதிலேயே தொப்பை ஏற்படுவதும் என, பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.
வேறு வழியின்றி, உடலின் கலோரிகளை எரிப்பதற்கு, பணம் செலவழித்து "ஜிம்'முக்கு பயிற்சி செல்ல வேண்டிய நிலைக்கு பலரும் ஆளாகின்றனர். இந்த பிரச்னைக்கு எளிய தீர்வாக இருப்பது, "ஸ்கிப்பிங்'. இதை வீட்டிலேயே அதற்கான கயிறை வாங்கி கிடைக்கும் நேரத்தில் செய்யலாம். ஜிம்முக்கு போகும் கட்டாயம் இல்லை. அனைத்துவிதமான உடல் உறுப்புகளுக்கும் இது மிகசிறந்த ஆரோக்கியத்தையம் தருகிறது.
உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் "ஸ்கிப்பிங்' முதன்மையானது. "ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். அதிகப்படியாக இருப்பின், குறையும். உடல் பருமன் பிரச்சனை தீரும்.
தினமும் இப்பயிற்சி செய்தால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, தொப்பை பிரச்னை படிப்படியாக குறையும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது ஸ்கிப்பிங்.
இப்பயிற்சியால், இருதயமும், நுரையீரலும் வலுப்பெறுகின்றன. கை, கால், தொடையில் இருக்கும் தசைகளுக்கு அதிக சக்தியும், வலுவும் கிடைக்கின்றன.
"ஸ்கிப்பிங்' பயிற்சியை துவங்குமுன், இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஷூ பயன்படுத்துவது நல்லது. "ஸ்கிப்பிங்' கயிறு சரியான அளவு கொண்டதாக இருப்பது முக்கியம். அதிக நீளமாகவோ, குட்டையாகவோ இருப்பது கூடாது.
மிதமான அல்லது வெறும் வயிறுடன் பயிற்சி செய்வதே சரியானது. ஸ்கிப்பிங் பயிற்சி, சமமான, வழுக்கும் தன்மை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும்.
கற்கள் மிகுந்த இடத்திலோ, மார்பிள் பதித்த தரைகளிலோ பயிற்சி செய்யக்கூடாது.
முதலில் கயிறை உங்களது பின் குதிகாலின் அடிப்பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாகக் கயிறைச் சுழல விட, அந்த வேகத்துக்கு ஏற்பக் கயிறைத் தாண்ட வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் வேகத்தைக் கூட்ட வேண்டும்.
இவ்வாறு, நின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதே, முதல்படி. தொடர்ந்த பயிற்சியின் மூலம் அடுத்தடுத்த நிலைகளை எட்ட முடியும். முன்புறம் தாவுதல், பின்புறம் தாவுதல், ஒடிக் கொண்டே தாவுதல், குறுக்கு வாக்கில் தாவுதல் என, பல வகைகளில் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.
தினமும், அரை மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால், உடலில் இருக்கும் 200 கலோரிகள் வரை எரிந்து காலியாகி விடும். அதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒரு சில மாதங்கள் "ஸ்கிப்பிங்' தொடரும் பட்சத்தில், தொப்பை உள்ளிட்ட உடல் பிரச்னைகள், நிச்சயமாக இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கவும். கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம். அந்நிலையில் பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப்பெற்றப் பின்னர் செய்வதுதான் நல்லது.

Next Story
×