search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா?
    X
    வாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா?

    வாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா?

    வெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது.
    வெறுங்காலில் நடப்பதால், உடல் நரம்புமண்டலத்தின் செயலாற்றல் அதிகரிக்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளின் ஆற்றல்மையம் பாதங்களில்தான் உள்ளதென்பார்கள், வெறுங்காலில் நடப்பதன்மூலம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆற்றல்புள்ளிகள் தூண்டப்பட்டு, அவற்றின் இயக்கம் சீராகி, உடல்நலமாகும். இதயபாதிப்புகள், இரத்தஅழுத்த கோளாறுகள், சர்க்கரைபாதிப்பு, நரம்புபிரச்னைகள், பார்வைக்குறைபாடு போன்றவற்றை வெறுங்காலில் நடப்பதன்மூலம், தீர்க்கமுடியும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

    வெறுங்காலுடன் பனித்துளிகள் உறையும், பஞ்சுபோன்ற மென்மையான புல்தரையில் நடப்பது, நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் மென்மையான அனுபவமாக இருக்கும். அவை பாதத்தில் படும்போது, இயற்கையின் மின்காந்த அதிர்வுகள், நம் உடலின் அதிர்வுகளோடு இணையும்போது, உடலாற்றல் தூண்டப்பட்டு, ஏற்படும் புவித்தொடர்பால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்த பாதிப்புகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிப்பவர்களுக்கு, பாதிப்பைப்போக்கி, தூக்கத்தை இயல்பாக வரவழைக்கும்.

    வெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது. நரம்புகள் சுருட்டிக்கொள்வதால் ஏற்படும் வெரிகோஸ் வெயின், இரத்த சர்க்கரை பாதிப்பு, போன்றவற்றை குணப்படுத்துவதால், மேலைநாட்டினர், வெறுங்காலுடனேயே தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    வெறுங்காலுடன் நடக்கும்போது, இரத்த செல்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரித்து, உடலிலுள்ள நச்சுக்கள் நீங்கி, நோயெதிர்ப்பு திறன் வலுவடைகிறது. வெறுங்காலுடன் நடக்கையில் பூமிக்கும் உடலுக்குமான தொடர்பால், மின்காந்த ஆற்றல் வலுப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு, உடல் ஆரோக்கியம் அத்தியாவசியமென்கிறார்கள், நிபுணர்கள்.

    கால்கள் நேரடியாகத் தரையில் படும்போது, உறுப்புகளின் ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கமும், மன ஆற்றலும் மேம்பட்டு, உடலில் புத்துணர்வு ஏற்படுகிறது. பாதங்கள் நேரடியாக பூமியில் படும்போது, உடலாற்றல் நேர்மறையாகவும், பூமியின் ஆற்றல் எதிர்மறையாகவும் செயல்பட்டு, அதனால் உண்டாகும் மின்காந்தஆற்றல் உடலெங்கும் பரவி, உடலியக்கத்தை சீராக்கி, நோய்கள், பாதிப்புகளைத்தீர்த்து, மனதில்அமைதியை ஏற்படுத்துகிறது.
    Next Story
    ×