search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம்
    X
    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம்

    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம்

    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.
    உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றிப் பேசும் அதேவேளையில் நாம் நமது வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ற சரியான உடற்பயிற்சியைத்தான் செய்கிறோமா என்பதும் மிக முக்கியம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று பார்ப்போமா?

    குழந்தைகள்

    குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுதல், நீச்சலடித்தல், யோகா போன்றவற்றைக் அவர்களுக்குக் கற்றுத் தரலாம். பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, சில அடி தூரத்துக்கு முன்னரே வாகனத்தை நிறுத்திவிட்டு நடக்க வைத்து அழைத்துச் செல்லலாம். வாலிபால், கிரிக்கெட், பாஸ்கெட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தலாம்.

    வளரிளம் பருவத்தினர்

    பதினெட்டு வயது ஆனதும் ஜிம்முக்கு அனுப்பலாம். தினமும் அரை மணி நேரம் ரன்னிங், ஜாகிங் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம். நோய்கள் எதுவும் இல்லாதபட்சத்தில், வளரிளம் பருவத்தினர் செய்யக்கூடாத பயிற்சிகள் என்று எதுவும் இல்லை. ஆனால், எந்தத் தேவையுமின்றி `சிக்ஸ் பேக்’ வைப்பது போன்ற முயற்சிகளைத் தவிர்க்கவும்.

    நடுத்தர வயதினர்

    நடுத்தர வயதினர் ஸ்ட்ரெச்சிங், வாக்கிங், ஜாகிங், டிரெட் மில், குறைவான எடையில் பளுதூக்குதல், நீச்சல் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். நடுத்தர வயதில் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இதனால் கடுமையான தசைவலி, தசைப்பிடிப்பு ஏற்படும். உடற்பயிற்சியின் மீதான ஆர்வமும் குறைந்துவிடும்.

    முதியவர்கள்

    முதியவர்கள் மிக மிகக் குறைந்த எடையை (ஒரு கிலோ அளவுக்கான எடை) தூக்கலாம். எந்த நோய்களும் இல்லையென்றால் வேகமான நடைப்பயிற்சிகூடச் செய்யலாம். மூச்சு வாங்கும் அளவுக்கு எந்த உடற்பயிற்சியையும் செய்யக்கூடாது. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு கட்டுக்குள் இருந்தால் ஜாகிங் செய்யலாம். ஆரோக்கியமாக உள்ள முதியவர்களும் ஜாகிங் செய்யும்போது கவனமாகச் செய்யவேண்டும்.
    Next Story
    ×