என் மலர்
பெண்கள் உலகம்

மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும் ஆசனங்கள்
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் போதிய யோகாசனங்களை செய்து வந்தாலே நல்ல மாற்றத்தைக் காணலாம். மலச்சிக்கலை போக்கும் ஆசனங்களை பார்க்கலாம்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு சீரற்ற செரிமானம் ஒரு காரணமாகும். எனவே செரிமானத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள தினமும் போதிய உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பவனமுக்தாசனம் (Pawanmuktasana) :
பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடுவது போல தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும்.
இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சியை நீக்கி, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
ஹலாசனம் (Halasana) :
ஹலாசனம் ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும்.
பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேபோல 3 முறை செய்து வர வேண்டும்.
இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, ரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.
திரிகோணாசனம் (Trikonasana) :
திரிகோணாசனம் செய்வதற்கு, முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும்.
இதேபோன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என்று ஆறு முறை செய்தால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
பாலாசனம் (Balasana) :
பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும்.
இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி குணமாகிவிடும்.

Next Story