என் மலர்

  குழந்தை பராமரிப்பு

  சிறுவர்களுக்கான நூலகமும், விநோத நிபந்தனையும்..
  X

  சிறுவர்களுக்கான நூலகமும், விநோத நிபந்தனையும்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்றைய கால சிறுவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போனில் செலவிடுகின்றனர்.
  • சிறுவர்கள் புத்தகங்களைப் படிப்பது என்பது சொற்ப எண்ணிக்கையில்தான்.

  ஒரு செடியை நட்டுப் பராமரிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்து உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு செடியை நட வேண்டும்.

  உலகம் முழுவதும் இன்றைய கால சிறுவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போன்களிலும், கார்ட்டூன்களைக் காண்பதிலும் செலவிடுகின்றனர். இது இரண்டும் இல்லாமல் ஒரு சிறுவரையோ அல்லது சிறுமியையோ காண்பது அரிது. அதேசமயம் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களே கூட புத்தகங்களைப் படிப்பது என்பது சொற்ப எண்ணிக்கையில்தான். நிலைமை இப்படி இருக்க, 9 வயதில் அதிக புத்தகங்களை வாசித்ததுடன், ஒரு நூலகத்தையும் அமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒரு சிறுவன்.

  கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அல்லினி எரிக் லால். இவனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்லு என்று அழைப்பது வழக்கம். இந்தச் சிறுவன் தனது பெரும்பாலான நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதற்குச் செலவிட்டு வந்தார். கொரோனா ஊரடங்கு இவரது புத்தக வாசிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில், தான் படித்த புத்தகங்கள் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் சேகரித்த புத்தகங்களைக்கொண்டு ஒரு நூலகத்தை அல்லு தொடங்கிவிட்டார்.

  கடந்த ஜூன் மாதம் இந்த நூலகத்தை சிறுவர்கள் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ரெனி அந்தோணி திறந்து வைத்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்த நூலகம் செயல்படும். 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். அவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனைதான். அல்லுவின் நூலகத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால் ஒரு செடியை நட்டுப் பராமரிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்து உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு செடியை நட வேண்டும்.

  இந்தச் சிறுவயதில் அல்லு சமூகத்திற்குச் சொல்லும் பாடம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சிறுவர்கள் நாட்டில் அதிகரித்தால் அது இயற்கைக்கும், எதிர்கால இந்தியாவுக்கும் பெரும் பலத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  Next Story
  ×