என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தையை குஷிப்படுத்தும் விளையாட்டு உலகம்
    X

    குழந்தையை குஷிப்படுத்தும் 'விளையாட்டு உலகம்'

    • குழந்தைக்காக தந்தைகள் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
    • தந்தைகள் தங்களின் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.

    குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தந்தைகள் எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சமயத்தில் தந்தைகள் தங்களின் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தமாட்டார்கள் என்றாலும் பிள்ளைகள் அடையும் ஆனந்தத்தை பார்த்து மனம் குளிர்ந்து போவதுண்டு.மொத்தமே 46 விநாடிகளே பதிவாகி இருக்கும் அந்த வீடியோவில் குழந்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், பார்ப்பவர்களை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து செல்ல வைத்துவிடும். அந்த அளவிற்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவும் ரசிக்க வைத்திருப்பதாக பலரும் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்கள்.

    தத்தி தத்தி நடை பயலும் குழந்தை ஒன்று தனக்காக தந்தை உருவாக்கி இருக்கும் 'மினி பிளே ஹவுஸில்' ஏறி விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அந்த குழந்தை சிறிய கூடாரத்துக்குள் ஓடோடி செல்கிறது. அங்கு மர பலகையில் செய்யப்பட்டிருக்கும் லிப்ட் போன்ற கட்டமைப்பின் மீது ஏறிக்கொள்கிறது. தந்தையின் அறிவுறுத்தலின்படி இரு கைகளையும் மரப்பலகையின் மீது வைத்து கெட்டியாக பிடித்துக்கொள்கிறது.

    உடனே தந்தை சங்கிலியை மரப்பலகையில் பொருத்துகிறார். அதை பார்த்து குழந்தை இரு கைகளையும் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. பிறகு குழந்தை இரு கைகளையும் மரப்பலகையின் மீது வைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டதும் தந்தை கயிறு மூலம் இழுக்கிறார். உடனே மர லிப்ட் அசைந்தாடியபடி சில அடி தூரம் மேலே செல்கிறது. உடனே குழந்தை ஆனந்தத்தில் மிதக்கிறது. கைகளை தட்டி ஆரவாரம் செய்கிறது.

    தந்தை லிப்டை பிடித்துக்கொள்ள, குழந்தை பின்னோக்கி நகர்ந்து மர வீடு போன்ற சிறிய கூடாரத்துக்குள் செல்கிறது. அங்கிருந்து எட்டிப்பார்த்து உற்சாகம் அடைகிறது. பிறகு மர லிப்ட்டுக்குள் வந்து மீண்டும் கீழே இறங்குகிறது. தரைத்தளத்தை அடைந்ததும் மீண்டும் கைகளை தட்டி சிரித்தபடியே வெளியே வருகிறது.

    மொத்தமே 46 விநாடிகளே பதிவாகி இருக்கும் அந்த வீடியோவில் குழந்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், பார்ப்பவர்களை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து செல்ல வைத்துவிடும். அந்த அளவிற்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவும் ரசிக்க வைத்திருப்பதாக பலரும் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

    Next Story
    ×