search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையின் ஒரு கையைப் பிடித்து தூக்கினால் இந்த பிரச்சனை வரும்
    X
    குழந்தையின் ஒரு கையைப் பிடித்து தூக்கினால் இந்த பிரச்சனை வரும்

    குழந்தையின் ஒரு கையைப் பிடித்து தூக்கினால் இந்த பிரச்சனை வரும்

    குழந்தைகளைச் சாலைகளில் செல்லும்போது நம்முடைய இடதுகையால் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச்செல்வது வழக்கம். குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.
    குழந்தைகளைச் சாலைகளில் செல்லும்போது நம்முடைய இடதுகையால் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச்செல்வது வழக்கம். குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

    பொதுவாக குழந்தையின் ஒரு கையைப் பிடித்து ஒருபோதும் தூக்கக்கூடாது. இரு கைகளின் அக்குளில் கெட்டியாகப் பிடித்துத் தூக்குவதே சரி. அடுத்து நாம் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லும்போது அதன் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்வோம். அப்போது திடீரென்று குழந்தை திரும்பும்போதோ விளையாட்டுத்தனமாகத் துள்ளிக்குதிக்கையில் கீழே விழும்போதோ கையில் எல்போ பகுதியில் பிரஷர் அதிகமாகி ஜாயின்ட் விலகியிடும். இது ரொம்பவே பயப்படக்கூடியது அல்ல. ஒரு நிமிடத்தில் சரி செய்துவிடலாம். அதனால் பெற்றோர்கள் பயப்படக்கூடாது.

    "பெரியவர்களே அதைச் சரியாகப் பொருத்திவிட முடியும். அப்படிச் செய்ய தயங்குபவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ஓரிரு நிமிடத்தில் சரி செய்துவிடுவார்கள். இன்னும் சிலர் குழந்தைகளின் கையை நாம் பிடித்து அழைத்துச் சென்றால்தானே இந்தச் சிக்கல் வரும். அதற்குப் பதிலாக குழந்தை நம் கையைப் பிடித்துக்கொண்டு வரச் செய்யலாமே என்று யோசனை சொல்கிறார்கள். கை எலும்பு தொடர்பாக வேண்டுமானால் இது சரியான ஆலோசனையாக இருக்கலாம் ஆனால் குழந்தை ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு கையை விட்டுவிட்டுச் செல்லக்கூடும். அப்படிச் சென்றுவிட்டால் வாகனத்தில் மோதவோ கீழே விழுந்துவிடவோ வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் கை நம் பிடியில் இருப்பதே நல்லது.

    குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் விட்டமின் டி ஆகியவை அவசியம். பச்சைக் காய்கறிகள் பால் முட்டைகளில் அந்தச் சத்துகள் அதிகம் இருக்கின்றன. அதனால் அவற்றைத் தொடர்ந்துகொடுத்துவர வேண்டும். மேலும் போதுமான அளவு உடற்பயிற்சியும் தேவை. 
    Next Story
    ×