search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பிரசவ குழந்தைக்கு எந்த அளவில் இருக்கும்?
    X
    நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பிரசவ குழந்தைக்கு எந்த அளவில் இருக்கும்?

    நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பிரசவ குழந்தைக்கு எந்த அளவில் இருக்கும்?

    முன்பெல்லாம் குறைப்பிரசவக் குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியாக வைத்திருப்பார்கள். குறைப்பிரசவ குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    முன்பெல்லாம் குறைப்பிரசவக் குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியாக வைத்திருப்பார்கள். காரணம் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தாய் உட்பட யாரையுமே மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், தற்போது பிறந்த குழந்தைகளுக்கான தனி தீவிர சிகிச்சைப்பிரிவு அமைத்து அங்கு எப்போதும் தாய் கூடவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    தாயின் குரல், தாயின் அரவணைப்பு போன்றவை அந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்போது விரைவான முன்னேற்றம் ஏற்படுவதையும் கண்கூடாக உணர முடியும். ஆரம்பத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தாயிடமிருந்து தாய்ப்பாலை பிழிந்து எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து, போகப்போக அந்தக் குழந்தை தானாக அருந்தும் திறனைப் பெற்றவுடன் நேரிடையாக தாய்ப்பாலைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    ‘‘தற்போதுள்ள தொழில்நுட்பம், ஆய்வுகள் போன்றவற்றால் ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுத்துவிடுவதால், நீண்டநாள் பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. இருந்தாலும் குழந்தை அந்தந்த பருவத்தில் குப்புறப்படுப்பது, தவழ்வது, உட்கார்வது, நடப்பது போன்ற செயல்களை செய்கிறதா போன்ற விஷயங்களை தாயானவள் நுட்பமாக கண்காணிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பிஸியோதெரபி சிகிச்சைகள் மூலம் கொண்டு வந்துவிடலாம். சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் எடுத்துக் கொள்ளலாம்.

    அவர்களுக்குக்கூட ஸ்பீச் தெரபி மூலம் சரி செய்துவிடலாம். இவர்களின் கேட்கும் திறன், பார்வைத்திறன் போன்றவற்றை வருடத்திற்கு ஒருமுறை அவ்வப்போது சோதனை செய்து பார்த்துவிட வேண்டும். இதுவும் கூட 30 வாரங்களிலேயே பிறந்த குறைப்பிரசவக் குழந்தைகளுக்குத்தான் வரும் என்பதால் மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. குழந்தையின் வளர்ச்சிப்படி நிலையை தாய் கூர்ந்து கண்காணித்து, தவறாமல் சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் இவர்களும் மற்ற குழந்தைகளைப்போலவே வெகு இயல்பான அறிவுத்திறன் கொண்டவர்களாக வளர்ந்துவிடுவார்கள்.’’
    Next Story
    ×