search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    8-12 மாத குழந்தையின் பேசும் திறன்..
    X
    8-12 மாத குழந்தையின் பேசும் திறன்..

    8-12 மாத குழந்தையின் பேசும் திறன்..

    8-12 மாத காலத்தில் குழந்தைகள் நடத்தல், பேசுதல் போன்ற செயல்களை புரிவர். பெற்றோராகிய நீங்கள் எதையெல்லாம் குழந்தைக்கு பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
    8-12 மாத காலத்தில் குழந்தைகள் நடத்தல், பேசுதல் போன்ற செயல்களை புரிவர். பெற்றோராகிய நீங்கள் எதையெல்லாம் குழந்தைக்கு பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.  

    1. யார் யார் எந்த உறவினர் மற்றும் செல்லப்பிராணிகள் இவர்களின் பெயர்களை அறிமுகப்படுத்த உகந்த நேரம் இது. குழந்தைகள் எளிதில் அனைத்தையும் கற்றுக் கொள்வர்...!

    2. குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள், பழங்கள், காய்கள் மற்றும் பொருட்கள் இவற்றின் பொருட்களை கற்றுக்கொடுக்க ஏற்ற நேரம் இதுவே! அவர்கள் நீங்கள் கூறுவதை நன்கு கேட்டு, அதை மனதில் பதிய வைக்கும் தருணமும் இதுவே!

    3. குழந்தைகளுடன் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டிருங்கள்; அவர்களுக்கு ஏதேனும் பொருள் அல்லது இடத்தை பற்றிய தகவல்களை சொல்லுங்கள். நீங்கள் கூறுபவை குழந்தையின் மனதில் ஆழமாக பதிவதோடு, அவர்கள் அதை திரும்பக் கூற முயற்சியும் புரிவர்..!

    4. இந்த காலகட்டத்தில் பேச துவங்கிய பின், குழந்தைகள் பாடல்களை நன்கு கவனித்துக் கேட்பர். உங்கள் குழந்தைக்கு நல்ல பாடல்களை பாடிக் காட்டுங்கள். நீங்கள் பாடிக்காட்டினால், குழந்தைகள் அதை திரும்பிப் பாட முயல்வர்..!

    5. குழந்தைகள் படங்கள் மற்றும் காணொளி பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவர். ஆகையால், நல்ல நிறமுள்ள படங்களைக் காட்டி குழந்தைகளை வார்த்தை உச்சரிப்புகள் செய்யும் படி பழக்கலாம். இப்படி படங்களை பார்த்து பயில்வது, குழந்தைகளின் மனதில் ஆழமாக, எளிதில் பதிந்துவிடும்..!
    Next Story
    ×