என் மலர்tooltip icon

    உலக கோப்பை கால்பந்து-2022

    • 11-வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்க தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளது.
    • ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செனகல் 18-வது தரவரிசையில் இருக்கிறது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் கத்தார் உள்பட 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டிக்காக கடந்த 12 ஆண்டுகளில் கத்தார் அரசு 18 லட்சம் கோடி வரை செலவிட்டு உள்ளது. தலைநகர் தோகா, அல்கோரி, லுசைல், அல்ரேயான், அல்வர்க்கா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது.

    நேற்றைய தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஈக்வடார்-கத்தார் அணிகள் மோதின. இதில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வாலென்சியா இந்த 2 கோல்களையும் அடித்தார்.

    2-வது நாளான இன்று 3 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு அல்ரேயானில் உள்ள கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன.

    தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஐரோப்பியா கண்டத்தில் உள்ள இங்கிலாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள ஈரான் 20-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தை வீழ்த்துவது சவாலானது. இதனால் 'டிரா' செய்ய ஈரான் போராடும். இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

    2-வது ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது. தோகாவில் உள்ள அல்துமமா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள செனகல்-நெதர் லாந்து அணிகள் மோதுகின்றன.

    தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது. 3 முறை இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை இழந்த அந்த அணி செனகலுடன் ஒப்பிடுகையில் வலுவானதாகும்.

    ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செனகல் 18-வது தரவரிசையில் இருக்கிறது. இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. அல்ரேயானில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    11-வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்க தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளது. 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பையில் களம் புகுந்துள்ளது. அந்த அணி தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்க கடுமையாக போராடும்.

    இரு அணியும் 2 முறை மோதி இருந்தன. இதில் 2003-ம் ஆண்டு மோதிய ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. 2020 போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

    • அண்மையில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற 34 வயதான பென்ஜிமா, ஸ்பெயினின் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுகிறார்.
    • பென்ஜிமா விலகல் நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

    தோகா:

    பிரான்சின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் கரீம் பென்ஜிமா உலக கோப்பை போட்டிக்காக சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் பயிற்சியின் போது அவரது இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று உலக கோப்பை போட்டியில் இருந்து விலகினார்.

    அண்மையில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற 34 வயதான பென்ஜிமா, ஸ்பெயினின் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுகிறார்.

    2021-22-ம் ஆண்டு சீசனில் மாட்ரிட் அணிக்காக பென்ஜிமா 32 ஆட்டத்தில் 44 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது விலகல் நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

    ஏற்கனவே பால் போக்பா, என்கோலோ கான்டே ஆகியோரும் காயத்தால் பின்வாங்கியதால், இப்போது பிரான்ஸ் தங்களது திட்டமிடலை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    • உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
    • முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் கத்தார், ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஈகுவடார் அணியின் வேலன்சியா கோல் அடித்தார். தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா, தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி.

    தோகா:

    உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஏ பிரிவு - கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவு - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவு - அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

    இ பிரிவு - ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

    எப் பிரிவு - பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவு - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவு - போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

    டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது.

    உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×