search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் மே, ஜூன் மாத ரூ.300 தரிசன டிக்கெட் 1½ மணிநேரத்தில் தீர்ந்தன
    X

    திருப்பதி கோவிலில் மே, ஜூன் மாத ரூ.300 தரிசன டிக்கெட் 1½ மணிநேரத்தில் தீர்ந்தன

    • ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
    • 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்காமல் இருப்பதற்காக தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது.

    இந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்று காலை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    மே மாதத்திற்கான 7 லட்சத்து 75 ஆயிரம் டிக்கெட்டுகளும், ஜூன் மாதத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 15 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்படுவதால் விறுவிறுப்பாக தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் டிக்கெட் முன் பதிவு செய்ய முயன்றதால் ஆன்லைன் சேவை முடங்கியது. இதனால் பக்தர்கள் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டே இருந்தனர். ஒரு வினாடிக்கு 20 முதல் 30 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. வெளியிடப்பட்ட 1½ மணி நேரத்தில் 15.25 லட்சம் தரிசன டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.

    ஆன்லைன் முன்பதிவு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் வேகமாக நடந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தகர்.

    இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம், அலிபிரி, கோவிந்தராஜ சாமி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தினமும் 25 ஆயிரம் நேர ஒதுக்கிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

    இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை, சுப்ரபாதம், நிஜபாத சேவை, சகஸ்ர தீப அலங்காரம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதியில் நேற்று 63, 870 பேர் தரிசனம் செய்தனர்.27,480 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×