search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த வார விசேஷங்கள் (12.12.2023 முதல் 18.12.2023 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (12.12.2023 முதல் 18.12.2023 வரை)

    • 13-ந்தேதி அனைத்து பெருமாள் கோவில்களிலும் பகல்பத்து உற்சவம் ஆரம்பம்.
    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காளிங்க நர்த்தன காட்சி

    12-ந்தேதி (செவ்வாய்)

    * கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி.

    * அமாவாசை.

    * திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * சமநோக்கு நாள்.

    13-ந்தேதி (புதன்)

    * அனைத்து பெருமாள் கோவில்களிலும் பகல்பத்து உற்சவம் ஆரம்பம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (வெள்ளி)

    * வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காளிங்க நர்த்தன காட்சி அருளல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (சனி)

    * சதுர்த்தி விரதம்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், ஆண்டாள் திருக்கோலமாக காட்சியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலக் காட்சி.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (ஞாயிறு)

    * தனுர் மாத பூஜை ஆரம்பம்.

    * அனைத்து ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்க விழா.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், காளிங்க நர்த்தன காட்சி.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * பிள்ளையார் நோன்பு.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபதநாதன் திருக்கோலம்.

    * மேல்நோக்கு நாள்.

    Next Story
    ×