search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்: கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி திருப்பலி
    X

    தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்: கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி திருப்பலி

    • புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
    • கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த மாதம் 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றிவிழா கொண்டாட்டம் கடந்த 5-ந் தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் நடந்தது. விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், திருப்பலியும் நடந்தது.

    இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி கலந்து கொண்டார். தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. விழாவில் 30-க்கும் மேற்பட்ட ஆயர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், பல்சமய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி விழா திருப்பலி நேற்று மாலையில் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    நிகழ்ச்சியில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ், மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், செயலாளர் இம்மானுவேல், வட்டார முதல்வர் சகாய ஆனந்த், சவேரியார் பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், உதவிப் பங்குத்தந்தையர்கள் பிரான்கோ, ஆன்றோ ஜெராபின், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணைச் செயலாளர் ராஜன் ஆராய்ச்சி, பொருளாளர் ராபின் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×