search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி, சீனிவாசமங்காபுரத்தில் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்
    X

    திருப்பதி, சீனிவாசமங்காபுரத்தில் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

    • கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வரும் 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    அப்போது கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் பூஜை பொருட்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. அதன்பிறகு கோவில் முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்படுகிறது. எனவே நாளை காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அதேபோல் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×