search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குன்னத்தூர் பொன்காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    தேரோட்டம் நடைபெற்றதையும், பக்தர்கள் குண்டம் இறங்கியதையும் படத்தில் காணலாம்.

    குன்னத்தூர் பொன்காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • இன்று மாலை 5 மணிக்கு ரதம் நிலை சேருதல் நடைபெறும்.
    • 26-ந்தேதி முரசனுக்கு அடசல் பூஜை நடக்கிறது.

    குன்னத்தூரில் பொன்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், கன்னிமார் சுவாமிகளுடன் முரசன் சுவாமிகளும் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் குண்டம் மற்றும் தேர் ருவிழா பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மகுடம் ஏற்றுதல், சந்தன காப்பு அலங்காரம், கிராம சாந்தி நடைபெற்றது. 18-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றம், இரவு 8 மணிக்கு சாமி நகை எடுத்து வர வலையபாளையம் செல்லுதல் நடைபெற்றது. பின்னர் அம்மை அழைப்பு, மாலை 6 மணிக்கு குண்டம் திறப்பும் நடைபெற்றது

    திருவிழாவில் நேற்று முக்கிய நிகழ்வான பாரியூர் கொண்டத்து காளியம்மனை அழைத்து குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனைத் தொடர்ந்து ரத ஆரோகணம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ராதா உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு ரதம் நிலை சேருதல் நடைபெறும்.

    நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 23-ந் தேதி இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அதனைத் தொடர்ந்து மண்டப கட்டளை நடைபெறும். 24-ந் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், இரவு 8 மணிக்கு சாமி நகை வலையபாளையம் கொண்டு செல்லுதல் நடக்கிறது. 25-ந் தேதி காலை மறுபூஜை நிறைவு, 26-ந்தேதி முரசனுக்கு அடசல் பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×