என் மலர்
வழிபாடு

கடலில் புனித நீராடிய பக்தர்களை படத்தில் காணலாம்.
திருச்செந்தூர் கோவில் கடலில் புனித நீராடி பக்தர்கள் சுவாமி தரிசனம்
- மார்கழி பிறப்பு இன்று தொடங்கி ஜனவரி 14-ந்தேதி முடிகிறது.
- ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தமிழ் மாதமான மார்கழி பிறப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனால் மார்கழி மாத்தில் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
இன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும். இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆரூத்திரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.






