search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 12-ந்தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து சாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம்.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று முதல் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி ஆகிய கிராமத்து மக்கள் சேர்ந்து தினமும் ஒவ்வொரு ஊர் மக்கள் மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்து சாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 12-ந்தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலு, 4 கிராமங்கள் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் இருக்கன்குடி செந்தாமரை, என்.மேட்டுப்பட்டி பாண்டியம்மாள் கருப்பசாமி, கே.மேட்டுப்பட்டி முத்துமாரியம்மாள் மாரிமுத்து, நத்தத்துப்பட்டி சூரியா பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×