search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் ஆன்லைன் லிங்கில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வசதி
    X

    திருப்பதி கோவிலில் ஆன்லைன் லிங்கில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வசதி

    • பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.
    • டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் உட்பட கட்டண சேவை டிக்கெட் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.

    டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். பின்னர் வங்கி கவுண்டரில் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி, டிக்கெட் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் டிக்கெட் ஒதுக்கீடாக பெறும் பக்தர்கள் மொபைல் எண்ணுக்கு பேமென்ட்லிங்க் அனுப்பி, அதன்மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளும் வசதியை தேவஸ்தான நிர்வாகம் சோதனை அடிப்படையில் நேற்று அறிமுகம் செய்தது.

    இந்த பேமென்ட் லிங்க் மூலம் யுபிஐ ஐடி, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பக்தர்கள் பணம் செலுத்தலாம். பக்தர்கள் கொடுத்திருக்கும் வாட்ஸ்ஆப் எண் அல்லது மெயில் ஐடிக்கு டிக்கெட் வந்து சேரும். அந்த டிக்கெட்டை பக்தர்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

    திருப்பதியில் பரிசோதனை அடிப்படையில் கொண்டு வந்துள்ள இந்த நடைமுறை வெற்றி பெற்றால், அடுத்து வி.ஐ.பி பிரேக் தரிசன கட்டணம் செலுத்தவும் இதே நடைமுறையை கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×