search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சூலக்கல் மாரியம்மன்
    X
    சூலக்கல் மாரியம்மன்

    கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு

    தேர்திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும், அதனைதொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சல் மற்றும் மலர் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந் தேதி முதல் தினசரி காலை, மாலை நேரங்களில் மாரியம்மன் குதிரை, சிம்ம வாகன சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேலும் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 3 நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. 3-ம் நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. அன்று இரவு 7.20 மணிக்கு தேரோட்டகொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும், அதனைதொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சல் மற்றும் மலர் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்ததனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபன்ன மன்றாடியார், சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலக்கல், கேரளா மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    Next Story
    ×