என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவபெருமான் மீனாட்சி
    X
    சிவபெருமான் மீனாட்சி

    வைகை உருவான வரலாறு தெரியுமா?

    சிவபெருமான் மீனாட்சியை திருமணம் செய்த வரலாறு மதுரையில் சிறப்பு வாய்ந்தது. “வைகை” உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமான் மீனாட்சியை திருமணம் செய்த வரலாறு மதுரையில் சிறப்பு வாய்ந்தது. முன்பொரு காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் குழந்தைபேறு இல்லாமல் தவித்து வந்தான். “இறைவனை நோக்கி தவமிருந்தபோது கடம்பவனத்தில் பெண் குழந்தை இருக்கிறது. அதனை எடுத்து வளர்த்து வா” என இறைவன் கனவில் கூறினார். அதன் படி பாண்டிய மன்னன் குழந்தையை எடுத்து பார்த்தபோது, இயற்கைக்கு மாறாக தனம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது அந்த பெண் பருவ வயதை அடையும்போது யாம் வந்து ஆட்கொள்வோம், அப்போது அந்த தனம் மறைந்து போகும் என அசரிரி ஒலித்தது. அந்த குழந்தை கல்வி, கேள்விகளில் ஞானம் பெற்று பல்வேறு வெற்றிகளை சூடியது. பருவ வயதில் சிவபெருமான் காட்சி கொடுத்து மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு வந்த சிவபெருமான் 4,5 பூதகணங்களுடன் மட்டுமே வந்துள்ளார். இதனை பார்த்த மீனாட்சி இங்கு ஏராளமான சமையல் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் 5 பேருடன் மட்டுமே வந்துள்ளீர்கள். இதனால் உணவு வீணாகி விடுமே என கூறியுள்ளார்.

    இதனை கேட்ட சிவபெருமான் பூதகணங்களில் ஒவருவரான குண்டேஸ்வரனுக்கு மட்டும் உன்னால் உணவளிக்க முடிந்தால் போதும் என கூறினார். அதன்படி சாப்பிடத் தொடங்கிய குண்டேஸ்வரன் திருமண சாப்பாடு முழுவதையும் சாப்பிட்டும் பசி அடங்கவில்லை. அதன்பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட தண்ணீரும் பற்றவில்லை. இதனால் சிவபெருமான் குண்டேஸ்வரனை பார்த்து “தரையில் வை... கை...” என்றார். குண்டேஸ்வரன் கை வைத்ததும் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. அதை குடித்து அவன் பசியாறினான். அது தான் “வைகை” உருவான வரலாறு என்பது புராணங்களில் கூறப்படுகிறது.
    Next Story
    ×