search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தீப விளக்கு
    X
    தீப விளக்கு

    அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் ஐம்பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    இக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த விழாவின் போது அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து செல்வார்கள். அப்போது சிவன் அக்னி வடிவமாக காட்சி தருவதாக கூறுவார்கள்.

    தீபத்துக்கு புகழ்பெற்ற இக்கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி முன்பு ஆயிரக் கணக்கான தீபம் ஏற்றும் வகையில் விளக்குகள் உள்ளன.

    அவைகளை ஏற்றும் போது கோவில் தீப ஒளியில் ஜொலிக்கும்.ஆனால் பல நாட்கள் இந்த விளக்குகளில் தீபம் ஏற்றாமல் இருப்பதை காணும் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.

    தீபங்களை தினமும் ஏற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். கேரள மாநிலம் குருவாயூரப்பன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    அதே போல அக்னி ஸ்தலமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×