என் மலர்tooltip icon

    வழிபாடு

    தண்டு மாரியம்மன் கோவிலில் நடப்பட்டு இருந்த பெரிய கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது
    X
    தண்டு மாரியம்மன் கோவிலில் நடப்பட்டு இருந்த பெரிய கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது

    தண்டு மாரியம்மன் கோவிலில் நடப்பட்டு இருந்த பெரிய கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது

    தண்டு மாரியம்மன் கோவிலில் நடப்பட்டு இருந்த பெரிய கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது. அதை பக்தர்கள் வாணவேடிக்கையுடன் சுமந்து சென்றனர்.
    சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் பிரசித்திபெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மனின் அக்காள் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பெரிய கம்பம் நடப்பட்டு குண்டம் விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 6-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. 7-ந் தேதி பெரிய கம்பம் நடப்பட்டது. அன்று முதல் கடந்த 19-ந் தேதி வரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு நாள் இரவும் விடிய விடிய கம்பம் ஆட்டம் ஆடி வந்தார்கள்.
    சுமந்து சென்றனர்...

    இதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி கோவிலின் முன்பு குண்டம் விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் நடைபெற்றது.
    50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்து கம்பத்தை மெல்ல மெல்ல அசைத்து பிடுங்கினார்கள்.

    பின்னர் வாணவேடிக்கையுடன் தோளில் பவானி ஆற்றுக்கு சுமந்து சென்றார்கள். கம்பத்தை சுமந்து செல்லும் பணியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். பின்னர் கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது. இன்று (சனிக்கிழமை)  மஞ்சள் நீராட்டு விழாவும், வருகிற 28-ந் தேதி மறுபூஜையும் நடக்கிறது.
    Next Story
    ×