search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
    X
    கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சாமி வாகனத்தில் எழுந்தருளல், மங்கள இசை, சிறப்பு தீபாராதனை போன்றவை நடந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தேரானது 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பகல் 11 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலையில் மங்கள இசை, இரவு 7 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி பரிவேட்டைக்கு எழுந்தருளல், 9 மணிக்கு சப்தாவர்ணம் போன்றவை நடந்தது.

    விழாவின் இறுதி நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஆராட்டுக்கு சாமி எழுந்தருளல், 11 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனி, முத்து குடையுடன் யானை பவனி, சிறப்பு பஞ்சவாத்தியம், செண்டை மேளம், சிங்காரி மேளம், ஆராட்டு பூஜை, இன்னிசை கச்சேரி, விஸ்வகர்ம ரதம் ஆகியவை நடைபெறும். விழாவையொட்டி கிருஷ்ணன் கோவில் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×