
விழாவின் 8-ம் நாளான நேற்று கலி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு தொடர்ந்து பால் தர்மம் ஆகியவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு அய்யா பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் மேளதாளம் முழங்க எழுந்தருளி கலி வேட்டைக்கு புறப்பட்டார். ஒற்றையால் விளை, மாதவபுரம் சென்று முட்டப்பதிக்கு ஊர்வலமாக வந்து பதியின் வடக்கு வாசலில் கலி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு அய்யா திருத்தேரில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முட்டப்பதி தர்மகர்த்தாக்கள் மனோகரச்செல்வன் மற்றும் கைலாஷ் மனோகரச்செல்வன் ஆகியோர் செய்துள்ளனர்.