என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றியபோது எடுத்த படம்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது
By
மாலை மலர்2 April 2022 4:00 AM GMT (Updated: 2 April 2022 4:00 AM GMT)

ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்தனர். இன்று (சனிக்கிழமை) கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதாக பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலின் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 15-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
கடந்த 19-ந்தேதி இரவு 10 மணிக்கு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது.
இந்த கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் மற்றும் பால் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கடந்த 23-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தியும், 24-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடந்தது. 29-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கிலும், நேற்று இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், இரவு 9 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கிலும் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
முதலில் பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர் செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடையும். அதேநேரத்தில் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்களும் பிடுங்கப்பட்டு, மணிக்கூண்டுக்கு வரும்.
இதைத்தொடர்ந்து 3 கம்பங்களும் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, மண்டபம் வீதி, டவுன் போலீஸ் நிலையம், அக்ரஹார வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் பூசி மகிழ்வார்கள். இதன் காரணமாக ஈரோடு மஞ்சள் மாநகராக காட்சி அளிக்கும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story
×