
அக்னிதீர்த்த கடலில் புனித நீராட மற்றும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கோவிலில் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலை நம்பி வாழும் ரத வீதிகளை சுற்றி கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.