என் மலர்

  வழிபாடு

  ஸ்ரீகாளஹஸ்தி சிவன், அம்பாளுக்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் வழங்கிய பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள்
  X
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன், அம்பாளுக்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் வழங்கிய பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள்

  ஸ்ரீகாளஹஸ்தி சிவன், அம்பாளுக்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் வழங்கிய பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவன்-அம்பாளுக்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வேத பண்டிதர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. சிவன்-அம்பாளுக்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் சார்பில் அதன் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வர்லு, அறங்காவலர் குழு தலைவர் அகரம். மோகன்ரெட்டி ஆகியோர் நேற்று பட்டு வஸ்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்து, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் வேத பண்டிதர்களிடம் சமர்ப்பித்தனர்.

  இதையடுத்து அவர்கள் கோவிலில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை வழிப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

  முன்னதாக கோவிலுக்கு வந்த காணிப்பாக்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர், நிர்வாக அதிகாரியை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வரவேற்றனர்.
  Next Story
  ×