என் மலர்

  வழிபாடு

  ஆரணி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  X
  ஆரணி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

  ஆரணி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரணி அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
  ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் 150-வது ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா மற்றும் பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து காலை, மாலை இருவேளை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவில் மேஷ, பூத, சிம்ம, யானை, குதிரை வாகனங்களில் அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. மதியம் அலங்காரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி கிராமம் முழுவதும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

  வழிநெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பலியிடுதல் மற்றும் மிளகு, உப்பு, பொரி உருண்டை போன்றவைகளை இறைத்தனர்.

  விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள், கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
  Next Story
  ×