search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோனியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்.
    X
    கோனியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்.

    தேர்த்திருவிழா: சிம்ம வாகனத்தில் கோனியம்மன் வீதி உலா

    கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கோனியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    கோவையில் பிரசித்திபெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. 22-ம் தேதி இரவு கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதையொட்டி கோனியம்மன் தங்க கவசத்தில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கோனியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோனியம்மனை தரிசித்து சென்றனர்.
    Next Story
    ×