search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்திரனின் வாகனமாக இருக்கும் ‘ஐராவதம்’
    X
    இந்திரனின் வாகனமாக இருக்கும் ‘ஐராவதம்’

    இந்திரனின் வாகனமாக இருக்கும் ‘ஐராவதம்’

    பெரும்பாலான புராணங்களில், இந்திரனின் வாகனமாக இருக்கும் ‘ஐராவதம்’ என்ற வெள்ளை யானை, திருப்பாற்கடலை கடையும் போது சமுத்திரத்தில் இருந்து வெளிப்பட்டது என்றே கூறப்பட்டுள்ளது.
    இந்து மதத்தை சிறப்பிக்கும் வகையிலும், வேதங்கள் மற்றும் உபநிடதங்களை கதையாக புரிந்துகொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டவைதான், புராணங்கள். இவற்றிலும் 18 மகா புராணங்கள், 18 உப புராணங்கள் உள்ளன. பெரும்பாலான புராணங்களில், இந்திரனின் வாகனமாக இருக்கும் ‘ஐராவதம்’ என்ற வெள்ளை யானை, திருப்பாற்கடலை கடையும் போது சமுத்திரத்தில் இருந்து வெளிப்பட்டது என்றே கூறப்பட்டுள்ளது.

    இன்னும் சில புராணங்கள் வேறு ஒரு கதையையும் சொல்கின்றன. அதன்படி, மண்ணால் ஒரு உருண்டையைச் செய்த பிரம்மதேவன், அதன் மீது சில மந்திரங்களை பிரயோகித்தார். அந்த மண் உருண்டையை தேவலோகத்தில் இருந்த அதிதி என்ற பெண் சாப்பிட்டு விட்டாள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அந்த உருண்டை, அதிதியிடம் இருந்து வெளிப்பட்டது.

    இரண்டாக பிரிந்த அந்த உருண்டைக்கு பிரம்மன் உருவம் தந்து உயிர் கொடுத்தார். ஒன்று, ‘ஐராவதம்’ என்ற ஆண் யானையாகவும், மற்றொன்று ‘அபுரமு’ என்ற பெண் யானையாகவும் மாறின. இந்த இரு யானைகளும் வெள்ளை நிறத்துடன், நான்கு தந்தங்களைக் கொண்டிருந்தன. அதோடு அவற்றிற்கு இறக்கைகளும் இருந்தது. இந்த யானைகளுக்கு துணையாக மேலும் 7 ஜோடி யானைகளை பிரம்மதேவன் படைத்தார். அந்த எட்டு இணைகளும், எட்டு திசைகளையும் காத்து நிற்பதாக சொல்லப்படுகிறது. இவை ‘அஷ்டதிக் கஜங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை:-

    * ஐராவதம் - அபுரமு - கிழக்கு

    * அஞ்சனன் - அஞ்சனாவதி - மேற்கு

    * சர்வபவுமான் - சுப்ரதந்தி - வடக்கு

    * வாமனன் - அங்கனா - தெற்கு

    * புண்டரீகன் - கபிலா - தென்கிழக்கு

    * புஷ்பதந்தன் - தமரகர்ணி - வடமேற்கு

    * சுப்ரதீன் - அனுபமா - வடகிழக்கு

    * குமுதன் - பெங்கலா - தென்மேற்கு
    Next Story
    ×