என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோனியம்மன் கோவில்
    X
    கோனியம்மன் கோவில்

    கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா 14-ந் தேதி தொடங்குகிறது

    கோவை மக்களின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    கோவை மக்களின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 15-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு, 21-ந்தேதி கிராமசாந்தி, 22-ந் தேதி கொடியேற்றம், இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அக்கினிச்சட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து 23-ந் தேதி புலி வாகனம், 24-ந் தேதி கிளி வாகனம், 25-ந் தேதி சிம்ம வாகனம், 26-ந் தேதி அன்ன வாகனம், 27-ந் தேதி காமதேனு வாகனம், 28-ந் தேதி வெள்ளை யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    மார்ச் 1-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 2-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ராஜவீதி தேர் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் கோவில் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை வந்தடையும்.

    மார்ச் 3-ந் தேதி பரி வேட்டை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா, 4-ந் தேதி தெப்ப உற்சவம், 5-ந் தேதி தீர்த்தவாரி, அதன் பிறகு கொடியிறக்கம் நடைபெறுகிறது. மார்ச் 6-ந் தேதி வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. கொரோனா விதிகளை கடைபிடித்து தேர்த்திருவிழா நடத்தப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி மற்றும் தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×