
இந்த ரதசப்தமியின் ஒரே நாளில், ஸ்ரீதேவி- பூதேவி உடனாய மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வருவார். அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் வலம்வருவார்.
பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார்.