என் மலர்
வழிபாடு

வண்டுறை மாரியம்மன், சமயபுரத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
கோவில்களில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தைமாத வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தலைஞாயிறை அடுத்த சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர்.இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதபோல் வாய்மேடு பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story