என் மலர்
வழிபாடு

காளஹஸ்தி
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடக்கம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மார்ச் மாதம் 1-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்று பக்த கண்ணப்பர் கொடியேற்றமும், 25-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றமும் நடக்கிறது.
மார்ச் மாதம் 1-ந்தேதி மகா சிவராத்திரி விழா, இரவு நந்தி வாகனத்தில் சிவன், அம்பாள் ஊர்வலம், 2-ந்தேதி அதிகாலை லிங்கோத்பவர் தரிசனம், காலை 9 மணியளவில் தேர்த்திருவிழா, இரவு தெப்ப உற்சவம், 3-ந்தேதி இரவு சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், 4-ந்தேதி சபாபதி (நடராஜர்) திருக்கல்யாணம்.
மார்ச் 5-ந்தேதி கைலாசகிரி மலையில் கிரிவல நிகழ்ச்சி, 6-ந்தேதி காலை திரிசூல ஸ்நானம் மற்றும் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. 7-ந்தேதி இரவு பல்லக்கு சேவை, 8-ந்தேதி இரவு ஏகாந்த சேவையையொட்டி கோவிலுக்குள் பல்லக்கு சேவை, 9-ந்தேதி சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் வழக்கம் போல் அனைத்து ஆர்ஜித சேவைகளும் நடப்பதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story