என் மலர்

  வழிபாடு

  நாகராஜா கோவில்
  X
  நாகராஜா கோவில்

  நாகர்கோவிலுக்கு பெயர் தந்த நாகராஜா கோவில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் என்ற பெயர், இங்கு அமைந்துள்ள நாகராஜா கோவிலின் பெயரால் உருவானது.
  கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் என்ற பெயர், இங்கு அமைந்துள்ள நாகராஜா கோவிலின் பெயரால் உருவானது.

  நாகர் வழிபாடு மிக தொன்மையானது. நாட்டுப்புற தெய்வங்களின் கூறுகளை உள்ளடக்கிய இந்த வழிபாட்டை பிற்கால புராணங்கள் பெரிய அளவில் உள்வாங்கி கொண்டிருக்கின்றன. கேரளத்தில் சர்ப்ப(பாம்பு)க்காவுகள் குறித்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

  நாகராஜா கோவிலை பற்றி கதையொன்றும் வழக்கில் இருந்து வருகிறது. புல்லும், புதரும் நிறைந்திருந்த இந்த இடத்தில் இளம்பெண் ஒருத்தி புல் அறுத்த போது, அவளது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அதை கண்டு அஞ்சிய பெண் பக்கத்து கிராமத்தில் இருந்து சிலரை அழைத்து வர அவர்களும், இந்த அதிசயத்தை பார்த்து அந்த இடத்தில் ஒரு சிறு கோவிலை அமைத்து வணங்கி வந்தனர். இதை கேள்விப்பட்டு பல இடங்களில்இருந்தும் மக்கள் திரண்டு வந்து வணங்கினர் என்று அதில் கூறப்படுகிறது.

  தொழுநோயால் பாதிக்கப்பட்ட களக்காட்டு மன்னர் இந்த கோவிலை பற்றி கேள்விப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இங்கு வந்து வழிபட வியத்தகு முறையில் அவரது நோய் பூரணமாக குணம் அடைந்தது.

  இதனால் இந்தஆலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. மகிழ்ச்சியடைந்த மன்னர் இன்றிருக்கும் ஆலயத்தை கட்டினார் என்றும் கூறப்படுகிறது.

  இந்த ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்கும் வழிபாடு நடைபெறும். அனந்த கிருஷ்ணனுக்கே தைத்திருவிழாவும், அதையொட்டிய தேரோட்டமும் நடைபெறுகிறது.

  ஒவ்வொரு ஆண்டும் தைத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தைத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சாமி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

  இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது. காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

  இந்த தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்து, தேரடியை அடையும். அங்கு சாமிக்கு பூஜை, தீபாராதனை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நாகராஜா கோவில் குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஒழுகினசேரி ஆராட்டுத்துறையில் இருந்து 7.15 மணிக்கு சாமி எழுந்தருளுகிறார்.

  இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலில் எழுந்தருளுகிறார்.

  இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினருடன் விழாக்குழுவினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
  Next Story
  ×