search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
    X
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடக்கம்

    கடந்த காலங்களில் அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒருநாள் அபிஷேகத்தில் 5 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 1,008 வடைமாலை சாத்தப்படும்.

    பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர்.

    கடந்த காலங்களில் அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒருநாள் அபிஷேகத்தில் 5 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதன்படி ஒரு நபருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வடமாலை அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
    Next Story
    ×