என் மலர்

  வழிபாடு

  மீனாட்சி அம்மன் கோவில்
  X
  மீனாட்சி அம்மன் கோவில்

  மீனாட்சி அம்மன் கோவிலில் கட்டண தரிசனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீனாட்சி அம்மன் கோவிலில் பொது தரிசன பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், கட்டண தரிசனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
  தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்ககம் சார்பில் கலெக்டர் அனிஷ் சேகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுக்கு கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு ஒய்வெடுக்கும் அறைகள் இல்லை. மேலும் அவர்கள் குளிக்க, கழிப்பறை செல்ல எந்தவொரு அடிப்படை வசதியும் சரியாக இல்லை. அதே போல் செல்போனை சார்ஜ் செய்வதற்கும் வசதி இல்லை.

  மிக முக்கியமாக கட்டண தரிசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களை அதிக நேரம் காக்க வைக்கிறார்கள். இது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கும் புகார் மனு அனுப்பினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

  அதே போல் கோவிலில் பக்தர்கள் சிறிய தேங்காய் உடைப்பதற்கு அனுமதி தர வேண்டும். கோவிலுக்கு புதிதாக வரும் வெளிமாநில பக்தர்கள் தங்கள் உடன் வருபவர்களை தவற விட்டு விடுகிறார்கள். எனவே அவர்களை தேடி அலையும் நிலை உள்ளது. எனவே கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரிசன கட்டணத்தால் சிரமம் ஏற்படுகிறது. எனவே அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×