என் மலர்

  வழிபாடு

  ஒரு லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டுள்ள காட்சி.
  X
  ஒரு லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டுள்ள காட்சி.

  ராமேசுவரம் கோவிலில் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர்-சிவகாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமேசுவரம் கோவிலில் சுமார் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
  ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 9-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் தினந்தோறும் ராமநாத சுவாமி, மாணிக்கவாசகர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தை வலம் வந்தனர்.

  கடைசி நாளான இன்று அதிகாலையில் ராமநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடராஜர் -சிவகாமி அம்பாள் ஆகியோர் தங்க கேடயத்தில் 3-ம் பிரகாரத்தில் எழுந்தருளினர். அங்கு சுமார் 1 லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக 7 திரைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு ஒவ்வொரு திரை திறப்பின்போது சிறப்பு பூஜை நடந்தது.

  7-வது திரையான வெண்திரை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
  Next Story
  ×