என் மலர்
வழிபாடு

கல்ப விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் காட்சி
பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை கல்ப விருட்ச வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் ‘ராஜமன்னார்’ அலங்காரத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 5-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்தோற்சவம், இரவு தங்க யானை வாகன சேவை நடக்கிறது.

Next Story