என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவில்
    X
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவில்

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 10-ந்தேதி மூஷிக வாகன வீதி உலா ரத்து

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி மூஷிக வாகன வீதி உலா ரத்து செய்யப்படுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதையொட்டி திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    காலை சுப்ரபாதத்துக்கு பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி மூஷிக வாகன வீதி உலா ரத்து செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×