என் மலர்

  ஆன்மிகம்

  சதுரகிரி
  X
  சதுரகிரி

  ஆடி அமாவாசையன்று சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 8-ந்தேதி பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்த கோவில் அமைந்திருந்தாலும் மலை ஏறும் அடிவாரமான தாணிப்பாறை பகுதி, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

  பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2015-ம் ஆண்டு முதல் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டுமே மலை ஏறி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

  இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு
  ஆடி அமாவாசை
  விழா வருகிற 8-ந்தேதி பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.

  கொரோனா முழுமையாக இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வருகிற 6, 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

  எனவே மேற்கண்ட 4 நாட்களிலும் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என காவல் துறையினர், வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 6-ந்தேதி பிரதோஷ சிறப்பு பூஜைகளும், 8-ந் தேதி அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அமாவாசை சிறப்பு பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  Next Story
  ×