என் மலர்

    ஆன்மிகம்

    பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    X
    பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பரமக்குடியில் சித்திரை திருவிழா: பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் பவனி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பரமக்குடி சித்திரை திருவிழாவில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கள்ளழகரை தரிசித்தனர்.
    பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங் கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவி லுக்குள் வழிபாடு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து அரசு வழிகாட்டுதலுடன் கோவிலுக்குள்ளேயே சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு வைகைஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்திற்குள்ளேயே பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதற்காக நேற்று காலை 9 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோவில் ஊழியர்கள் மட்டும் வைகை ஆற்றில் இறங்கி ஆற்று மணல் எடுத்து வந்து கோவிலை அடைந்தனர்.

    பின்னர் கள்ளழகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கள்ளழகரை தரிசித்தனர். கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சும் பக்தர்கள் கோவிலின் முன்பு நின்று புனிதமான மஞ்சள் நீரை பீச்சி நேர்த்திக்கடன் செலுத்தினர். வைகை ஆற்றில் இருந்து திரி ஆட்டம் ஆடுபவர்களும் சாமியாடி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    Next Story
    ×