
பின்னர் நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுமந்து சென்று காலை 9.30 மணியிலிருந்து 10.20 மணிக்குள் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், தச தரிசன நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை செம்பனூர் சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய தர்ம பரிபாலன சங்க தலைவர் சுப்ரமணியன் செட்டியார், செயலாளர் சுப்பிரமணியன் அம்பலம், பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.