search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி
    X
    அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி

    அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 67 அடி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர்.

    கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
    Next Story
    ×