என் மலர்
ஆன்மிகம்

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில்களுக்கு வந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் திறப்பு
கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இருப்பினும் பக்தர்கள் இன்றி கோவில்களில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு சிறிய கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர், புதிய தளர்வுகளை அறிவித்தார். அதில் அனைத்து கோவில்களையும் திறக்க உத்தரவிட்டார். இதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களும் திறக்கப்பட்டன. இதன்படி புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
முன்னதாக காலை 5.30 மணிக்கே பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல தீட்சிதர்கள் அனுமதித்தனர். தொடர்ந்து நடராஜர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் பக்தர்கள், தீட்சிதர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
இதேபோல் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நேற்று கைலாய வாத்தியங்கள் முழங்க திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் ஊழியர்கள், வாசல் முன்பு நின்று கொண்டு, பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். முன்னதாக அவர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு நின்றனர். இருப்பினும் முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், வட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் நின்றபடி வரிசையாக சென்று சாமியை தரிசனம் செய்தனர். ஆனால் பிரசாதம் வழங்கப்படவில்லை. நேற்று ராகு-கேது பெயர்ச்சி என்பதால் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் மதியம் 12 மணிக்கு பிறகு நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு மாலையில் கோவில் திறக்கப்பட்டது. அப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களும் திறக்கப்பட்டு இருந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் நடை நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவர் பூவராகபெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சோப்புத்திரவம் வழங்கப்பட்டது. இதை வைத்து பக்தர்கள் கை கழுவினர். தொடர்ந்து அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சுற்று பிரகாரங்களில் நின்று கொண்டு, பக்தர்களிடம்அரசின் செயல்முறை விளக்கங் களை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினர்.
ஆனால் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்கு அனுமதியில்லை. கோவிலுக்குள் அமரவும், தரையில் விழுந்து வணங்குவதற்கும் அனுமதி இல்லை. சமூக இடைவெளியுடன் ஒருவர் பின் ஒருவராக கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிரசாதம் அர்ச்சகரால் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள் மற்றும் நம்மாழ்வார் கைங்கர்யசபா பக்தர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர். மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 229 பெரிய கோவில்களும் நேற்று திறக்கப்பட்டன.
இவை அனைத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. முன்னதாக நவக்கிரகம் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story