என் மலர்
ஆன்மிகம்

திருக்காட்டுப்பள்ளி முருகன் கோவிலில் விடையாற்றி உற்சவம்
திருக்காட்டுப்பள்ளி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 20-ந் தேதி தீ மிதி உற்சவம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் காவடி ஊர்வலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்டது.
பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோவிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீதி உலா வந்த முருக பெருமானை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story